18 ஆண்டுகளாகியும் வாய்ப்பு வழங்காதது ஏன்? தலைமைக்கு நக்மா கேள்வி!
நக்மா தனக்கு ஏன் மாநிலங்களவை வாய்ப்பு அளிக்கப்படவில்லை என கேள்வி எழுப்பி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் 57 மாநிலங்களவை எம்பிக்களின் பதவி வரும் ஜூன் 22 ஆம் தேதி காலியாகிறது. தையடுத்து மாநிலங்களவை தேர்தல் வரும் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் திமுக, அதிமுக முன்னதாக தங்களது வேட்பாளர்களின் பெயரை அறிவித்த நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை அறித்தது.
ஆம், மாநிலங்களவை எம்பிக்களின் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது. ப.சிதம்பரம், ராஜிவ் சுக்லா, ரஞ்சித் ரஞ்சன், அஜய் மக்கான், ஜெயராம் ரமேஷ், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி ஆகியோர் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா, தனக்கு ஏன் மாநிலங்களவை வாய்ப்பு அளிக்கப்படவில்லை என கேள்வி எழுப்பி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடுள்ளதாவது, காங்கிரஸ் கட்சியில் இணைந்த போது மாநிலங்களவை வாய்ப்பு தரப்படும் என சோனியா காந்தி எனக்கு உறுதியளித்தார்.
நான் கட்சியில் இணைந்து 18 ஆண்டுகளாகியும் எனக்கு ஏன் மாநிலங்களவை வாய்ப்பு அளிக்கப்படவில்லை? மாநிலங்களவை வாய்ப்புக்கு எனக்கு என்ன தகுதி இல்லையா? என தனது ஆதங்கத்தை கேள்விகளாக பதிவிட்டுள்ளார்.