வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : திங்கள், 12 மே 2014 (12:43 IST)

கட்சி சின்னத்துடன் வாக்களித்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ள வாரணாசி காங்கிரஸ் வேட்பாளர்

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இன்று நடைபெற்று வரும் வாக்குப்பதிவின் போது, அத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் அஜய் ராய் வாக்களிக்கும் போது காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை உடையில் அணிந்து சர்ச்சையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அஜய் ராய் வாக்களிக்கும் போது காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை உடையில் அணிந்து சர்ச்சையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்த புகாரை அடுத்து வாக்குச்சாவடியில் உள்ள  சிசிடி கேமராவில் பதிவான காட்சிகளை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.
 
இன்று காலை அவரது மனைவியோடு  ராம்நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு  வாக்களிக்க வந்த அஜய் ராய் அவரது  குர்தாவில்   காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை வாக்குச்சாவடிக்குள் அணிந்து சென்று வாக்களித்துள்ளார்.  
 
இந்த சம்பவம் தொடர்பாக பாஜக  தேர்தல் ஆணையத்திடம்  புகார் அளித்துள்ளது.
 
இதையடுத்து இந்த புகாரை  குறித்து விசாரணை மேற்கொள்ள வாக்குச்சாவடியில் உள்ள  சிசிடி கேமராவில் பதிவான காட்சிகளை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.