வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 3 ஜனவரி 2016 (09:23 IST)

கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் மரணம்

கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் மரணம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

 
அர்தென்டு பூஷன் பரதன் எனப்படும் ஏ.பி.பரதன் [92] கடந்த மாதம் 7ஆம் தேதி திடீர் பக்கவாதத்தால் டெல்லியில் உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 8.13 மணிக்கு மரணமடைந்தார்.
 
இந்தியாவின் இடதுசாரி அரசியல் மற்றும் தொழிற்சங்கத் துறையின் முக்கியமான ஒரு ஆளுமையாக திகழ்ந்த ஏ.பி.பரதன், வங்கதேசத்தில் இருக்கும் பரிசால் என்ற இடத்தில் 1924–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24–ந் தேதி பிறந்தவர்.
 
1957ஆம் ஆண்டு மராட்டிய மாநில சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக ஒரு முறை வெற்றி பெற்றுள்ளார். ஆனாலும், 1967, 1980ஆம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
 
இதனையடுத்து 1996ஆம் ஆண்டு 2012–ம் ஆண்டு வரை கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்தார். அவருக்கு, அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.