திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 ஜூலை 2018 (12:26 IST)

8ஆம் வகுப்பு படித்தவர் செய்த ஆபரேஷன்: அதிர்ச்சி தகவல்

உத்தரபிரதேச மாநிலத்தில் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒருவர் நோயாளி ஒருவருக்கு ஆபரேசன் செய்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 
உபி மாநிலத்தில் உள்ள ஷாம்லி என்ற நகரில் நர்தேவ்சிங் என்பவர் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் 24 பேர் வரை மர்மமான முறையில் மரணம் அடைந்ததாக ஏற்கனவே மூன்று முறை மூடப்பட்டுள்ளது. இருப்பினும் தனது செல்வாக்கால் மீண்டும் மருத்துவமனையை அவர் திறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த நர்தேவ்சிங் சமீபத்தில் நோயாளி ஒருவருக்கு பெண் உதவியாளர் ஒருவருடன் இணைந்து ஆபரேசன் செய்துள்ளார். இதனை அந்த மருத்துவமனையில் உள்ள ஒருவர் யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்தவீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.