1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Citizenship Amendment Act to be implemented from Jan

குடியுரிமை திருத்த சட்டம் ஜன. முதல் மீண்டும் அமல்: பாஜக!

Corona
குடியுரிமை திருத்த சட்டத்தை, ஜனவரி முதல் அமல்படுத்தப் போவதாக பாஜக அதிரடியாக அறிவித்துள்ளது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய இஸ்லாமிய நாடுகளில் மத அடக்கு முறைக்கு ஆளான இந்து, கிறிஸ்து, ஜெயின் உள்ளிட்ட சிறுபான்மை மத மக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை அளிக்கும் சர்ச்சைக்குரிய, குடியுரிமை திருத்த சட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்தது. 
 
இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது, போராட்டங்களும் வெடித்தது. பின்னர் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் இந்த சட்டம் குறித்து எதுவும் பேசப்படாத நிலையில், அடுத்தாண்டு ஜனவரி முதல் முழுவீச்சில் அமல்படுத்தப்படும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் எவ்வளவு? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு!