புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 3 ஜூலை 2017 (17:44 IST)

இந்தியாவிற்கு போர் எச்சரிக்கை விடும் சீனா!!

சிக்கிம் மாநிலத்தில் இந்தியா– சீனா எல்லை அருகே இந்திய ராணுவம் இரண்டு பதுங்கு குழிகளை அமைத்து இருந்தது. இந்த 2 பதுங்கு குழிகளையும் சீன ராணுவத்தினர் அழித்தனர். 


 
 
இதனால் இதுபற்றி விவாதிக்க இந்தியா சீனாவிற்கு அழைப்பு விடுத்தது. முதல் 2 அழைப்புகளை நிராகரித்த சீனா, 3–வது அழைப்பை ஏற்றுக்கொண்டது.
 
பின்னர் சீன செய்தி தொடர்பாளர் மற்றும் அருண் ஜெட்லீ ஆகியோருக்கு மத்தியில் சில கருத்து பரிமாற்றங்களும் நடைபெற்றது.
 
இதுபோன்று இந்தியா– சீன ராணுவத்தினர் இடையே சிக்கிம் மாநில பகுதியில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. சிக்கிம் எல்லையில் எழுந்து உள்ள பிரச்சனையை சரியாக கையாளவில்லை என்றால் போர் ஏற்பட வாய்ப்பு உள்ளது என சீன கண்காணிப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.