வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 13 டிசம்பர் 2017 (16:26 IST)

ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு ரத்து; மத்திய அரசு அதிரடி

வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை ரத்து செய்துள்ள மத்திய அரசு புதிய காலக்கெடு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

 
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை அடுத்து மத்திய அரசு 2018ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது. வங்கி கணக்கு, காப்பீடுகள் உள்ளிடவையுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி என அறிவிகப்பட்டு இருந்தது.
 
இந்நிலையில் தற்போது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ரத்து செய்யப்படுகிறது. புதிய காலக்கெடு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
 
வங்கு கணக்கு, பான் எண், மொபைல் எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்திய மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. நாளைய வழக்கின் நிலையை பொறுத்து மத்திய அரசு புதிய காலக்கெடுவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.