வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 செப்டம்பர் 2021 (12:22 IST)

பெகாசஸ் விவகாரத்தில் நாங்க எதையும் மறைக்கல! – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்!

பெகாசஸ் மென்பொருள் மூலமாக உளவு பார்த்ததாக மத்திய அரசு மேல் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

இஸ்ரேலின் ஐ.என்.எஸ் தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக இந்திய மத்திய அரசு கட்சி தலைவர்கள், ஊடகவியலாளர்களை உளவு பார்த்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து 500க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து உச்சநீதிமன்றம் விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று இந்த விசாரணையில் பதில் அளித்துள்ள மத்திய அரசு “பெகாசஸ் விவகாரத்தில் கூடுதலாக பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யப்போவதில்லை. பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு எதையும் மறைக்கவில்லை. பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு விரிவாக விசாரிக்கப்படும். அதற்கு முன்பு எத்தகைய மென்பொருள்கள் இந்த விவகாரத்தில் பயன்படுத்தப்பட்டது உள்ளிட்ட விவரங்களை வெளியிட முடியாது” என்று தெரிவித்துள்ளது.

ஆனால் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாததால் உச்சநீதிமன்றம் நேரடியாக மனுதாரர்களை விசாரித்து உத்தரவிட உள்ளதாக தெரிவித்துள்ளது.