Refresh

This website tamil.webdunia.com/article/national-india-news-intamil/central-govt-says-states-have-required-amount-of-vaccine-121060300068_1.html is currently offline. Cloudflare's Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive's Wayback Machine. To check for the live version, click Refresh.

வியாழன், 2 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 3 ஜூன் 2021 (11:28 IST)

மாநிலங்களிடம் தடுப்பூசி கையிருப்பு எவ்வளவு? கணக்கு வெளியிட்ட மத்திய அரசு

மாநிலங்களிடம் தடுப்பூசி கையிருப்பு எவ்வளவு? கணக்கு வெளியிட்ட மத்திய அரசு
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 1.64 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,34,154 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,84,41,986 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2,887 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  3,37,989 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,63,90,584 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 17,13,413 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
இதுவரை இந்தியா முழுவதும் 22,10,43,693 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 23 கோடிக்கும் அதிகமான டோஸ்கள், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளனவாம். இவற்றில் 21 கோடியே 71 லட்சத்து 44 ஆயிரத்து 22 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டு விட்டன.
 
தற்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் 1 கோடியே 64 லட்சத்து 42 ஆயிரத்து 938 தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.