1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 10 மே 2021 (10:04 IST)

எத்தனை கோடி டோஸ் கொடுத்து என்ன பயன்?

நாடு முழுவதும் இதுவரை 17 கோடியே 56 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் பைஸர், மாடர்னா, ஸ்புட்னிக், கோவாக்சின், அஸ்ட்ராஜெனகா ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனோடு சீனா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியான சினோபார்மை, அவசரத் தேவைகளுக்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
 
இந்நிலையில், நாடு முழுவதும் இதுவரை 17 கோடியே 56 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்னும் 72 லட்சம் டோஸ் மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
மேலும், 46 லட்சம் டோஸ் மருந்துகள் அடுத்த 3 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், சில மாநிலங்கள் தடுப்பூசிகளை வீணாக்குவது கவலை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,66,161 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,26,62,575 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 3,754 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  2,46,116 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,86,71,222 ஆக உயர்ந்துள்ளது.