1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 26 ஜூலை 2023 (14:21 IST)

அமலாக்கத்துறை இயக்குனரின் பதவியை நீட்டிக்க மத்திய அரசு முறையீடு.. நாளை விசாரணை..!

அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே மிஸ்ரா பதவியை நீட்டிக்க மத்திய அரசு முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 
 
அமலாக்கத்துறை இயக்குனர் எஸ் கே மிஸ்ரா ஜூலை 321 ஆம் தேதிக்கு பிறகு பதவியில் தொடரக்கூடாது என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. 
 
இந்த நிலையில் அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீட்டு மனுவை தாக்கல் செய்து உள்ளது 
 
ந்த முறையீட்டு மனுவில் நாளை விசாரணை கேட்டுக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் 
 
கடந்த 2021 மற்றும் 2022-ல் எஸ்கே மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட பதவி நீடிப்புகள் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran