நரேந்திர மோடிக்கு ட்விட்டரில் வாழ்த்து சொன்ன பிரபலங்கள்

வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified சனி, 17 மே 2014 (17:42 IST)
நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடிக்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை வலைத்தளத்தில் தெரிவித்த வண்ணம் உள்ளனர். மோடியை வாழ்த்திய பிரலங்களும் வாழ்த்துக்களும் வருமாறு:-
ரஜினிகாந்த்: வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றி பெற்ற மோடிக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
 
விவேக் ஓபராய்: ஒரு புதிய சாகப்தம் தொடங்கியிருக்கிறது. ஒற்றுமையான, அச்சமில்லாத வளர்ச்சியை நோக்கி நாட்டை கொண்டுசெல்வதற்கு வாழ்த்துகள்.
 
சித்தார்த்: பரம்பரை ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. இனி நல்ல நேரம் அமைய வாழ்த்துகள்.
 
மதூர் பண்டார்க்கர்: அலை கரையை கடந்து சென்றுவிட்டது. இளமையான மற்றும் துடிப்பான இந்தியா அமைய மோடி அவர்களுக்கும் அவரது கட்சியினருக்கும் வாழ்த்துகள்.
 
ராம்கோபால் வர்மா: நேருவுடன் ஆரம்பித்த காந்தி குடும்ப அரசியல் ராகுலுடன் நிறைவு பெற்றது.  
 
ஹேமா மாலினி: உண்மையான மோடி அலை. வளர்ச்சிக்கான அலை.
 
அனுபம் கேர்: ஜெய் ஹோ!
 
ஆஷா போன்ஸ்லே: நாட்டின் அடுத்த பிரதமராக வரவுள்ள மோடிஜிக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இவ்வாறு நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :