1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 19 ஜூலை 2015 (14:24 IST)

சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட வலியுறுத்தல்: லல்லு பிரசாத் யாதவ் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட வலியுறுத்தி லல்லு பிரசாத் யாதவ் இம்மாதம் 26 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.
 
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. அதன் அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு அந்த அறிக்கையின் விவரங்களை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகின்றது.
 
இதனால், இந்த கண்க்கெடுப்பு விவரங்களை வெளியிடவேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
 
இந்நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லல்லு பிரசாத் யாதவ் இம்மாதம் 26 ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் உண்ணாவிரப் போரட்டம் நடத்தவுள்ளார். இந்தப் போராட்டத்தில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
 
லல்லு பிரசாத் யாதவ்வின் இந்த அழைப்பை ஏற்று ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ்வும் இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளார்.
 
இது குறித்து சரத் யாதவ் கூறுகையில், "லல்லு பிரசாத் யாதவ்வுக்கு ஆதரவாக நாங்களும் உண்ணாவிரத்தில் பங்கேற்க உள்ளோம்.
 
இந்த உண்ணாவிரதத்தில் நாங்களும் பங்கேற்பதன் மூலம், மதசார்பற்ற கூட்டணி வலுவாக இருப்பதை சுட்டிக்காட்டுவதாக அமையட்டும்.

மேலும், இரண்டு கட்சிகளும் தனித்தனிபாதையில் செல்கின்றன என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கும்" என்று சரத் யாதவ் கூறியுள்ளார்.