மாணவனுக்கு பாலியல் தொல்லை: 10 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 1 மார்ச் 2017 (15:47 IST)
பள்ளியில் படிக்கும் சக மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பத்து மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 
 
பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட மாணவனுக்கு 12 வயதாகிறது. பாலியல் தொல்லையில் ஈடுபட்ட மாணவர்கள் 8, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். 
 
மாணவர்கள் அனைவரும் கடந்த சில நாட்களாவே, அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளனர். புறநகர் பகுதிக்கு அந்த மாணவனை அழைத்துச் சென்று, தகாத முறையில் படம் பிடித்தது, தங்களுடைய ஆசைக்கு இணங்ககுமாறு மிரட்டியுள்ளனர்.
 
முதலில் இந்த விஷயத்தை வெளியில் சொல்லத் தயங்கிய அந்த மாணவன், பின்னர் தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியோடு காவல்துறையில் புகார் அளித்துள்ளான்.
 
பின்னர் பத்து மாணவர்களையும் கைது செய்துள்ள காவல் துறையினர், அவர்கள் அனைவரையும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :