ராம்தேவின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ஒரு கோடி - பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பேச்சு

Geetha Priya| Last Updated: செவ்வாய், 6 மே 2014 (20:22 IST)
பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் ஒருவர் ராம்தேவின் தலை தன்னிடம் கொண்டுவந்து  தரும் நபருக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக பேசியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் ஹோஷியார்பூர் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் பகவன் சிங் சோகன். இவர் தலித் மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ராம்தேவின் தலையை யாரேனும் கொண்டு வந்தால் அவர்களுக்கு  ஒரு கோடி ரூபாய் தருவதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 
 
ராம்தேவ் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஏழை தலித் மக்களின் வீட்டிற்கு செல்வது தேனிலவை கொண்டாடச் செல்கிறார் என கருத்து தெரிவித்திருந்தார்.
 
இதற்கு அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ள வேளையில், ஹோஷியார்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பகவன் சிங் சோகன் பேசுகையில் 'ராம்தேவின் தலையை தன்னிடம் கொண்டு வந்து தருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் தருவேன்' எனக் கூறினார்.
 
இது குறித்து பேசிய அவர், என் கருத்தில் என்ன தவறு இருக்கிறது? ராம்தேவ் அனைத்து பெண்களையும் இழிவாக பேசும்போது நான் இவ்வாறு பேசுவதில் என்ன தவறு? என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :