1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 ஜூலை 2024 (18:14 IST)

9 வயது தங்கையை பலாத்காரம் செய்து கொலை செய்த 13 வயது சகோதரர்.. தாயும் உடந்தையா?

ஒன்பது வயது சிறுமியை அவரது சகோதரர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவத்தில் அந்த சிறுவனின் தாயும் உடந்தை என்று விசாரணையில் தெரியவந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் 9 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்ததில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது அவருடைய 13 வயது சகோதரர் என்பதை கண்டுபிடித்தனர்.

சம்பவ தினத்தில் 13 வயது சிறுவர் ஆபாச படம் பார்த்தபோது அருகில் உள்ள தங்கையை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இதனை அடுத்து அந்த சிறுமி தந்தையிடம் கூறுவேன் என்று மிரட்டியதை அடுத்து கொலை செய்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் சிறுவன் தனது தாயிடம் சென்று நடந்ததை கூறிய போது நடந்ததை அந்த தாய் உண்மையை மறைத்து விஷ பூச்சி கடித்ததால் தான் தனது மகள் இறந்து விட்டார் என காவல்துறை விசாரணையின் போது கூறியதாகவும் ஆனால் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அதன் பின்னர் தனது மகன் தான் கொலை செய்தான் என்று ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இது குறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva