திருமணத்தில் நடந்த ஒரு விஷயம்! – அடுத்த நாளே மரணம் அடைந்த மாப்பிள்ளை !

கோப்புப் படம்
Last Modified சனி, 15 பிப்ரவரி 2020 (14:12 IST)
கோப்புப் படம்

தெலங்கானாவில் திருமணம் ஆன அடுத்த நாளே மணமகன் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவில் கணேஷ் என்பவருக்கு கடந்த வியாழன் கிழமை திருமணம் நடந்துள்ளது. கோலாகலமாக நடந்த திருமணத்தின் போதே அவர் மிகவும் களைப்பாக இருந்துள்ளார். கல்யாணம் முடிந்து அடுத்த நாள் வீட்டில் இருந்த போது
மயக்கமடைந்து விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர் குடும்பத்தினர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு வந்து இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதைக் கேட்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். மகனின் மரணத்துக்குக் காரணம் திருமண வரவேற்பின் போது அதிக சத்தத்துடன் கூடிய பாட்டுக் கச்சேரிதான் என அவரது பெற்றோர் சொல்லியுள்ளனர். அந்த இரைச்சலைக் கேட்ட பின்புதான் அவரின் உடல்நிலை சரியில்லாமல் போனது என அவர்கள் சொல்லியுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :