1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (16:16 IST)

இந்திய பொருட்களுக்கு வரி குறைப்பு: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு!

Boris
இந்திய பொருட்களுக்கு வரி குறைக்கப்படும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய வருகையின்போது தெரிவித்துள்ளார் 
 
நேற்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கு வருகை தந்தார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை செய்தார். இதன் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்
 
இந்த சந்திப்பின்போது இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக கருதப்படுகிறது