1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 14 ஜனவரி 2022 (19:00 IST)

டெல்லி பூ மார்க்கெட்டில் வெடிகுண்டு பை கண்டுபிடிப்பு

டெல்லி பூ மார்க்கெட்டில் வெடிகுண்டு பை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு டெல்லியில்  காஜிபூரில் உள்ள ஒரு பூ மார்க்கெட்டியில் சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு வெடிகுண்டு பை கண்டுபிடிக்கபப்ட்டது.

இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு படை, மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்து, வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.