1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 3 மார்ச் 2017 (19:17 IST)

17 குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த பாஜக மகளிர் அணித் தலைவர்!

மேற்கு வங்க பாஜக மகளிர் அணித் தலைவர் ஜூகி சவுத்ரிக்கு குழந்தைகள் கடத்தலில் உள்ள தொடர்பு குறித்து புதிய அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளன.


 

தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். பிஸ்கட் கொண்டு செல்லும் பெட்டிகள் மூலம் குழந்தைகள் கடத்தப்படுவதை கண்டுபிடித்த சிஐடி போலீசார், இதுதொடர்பாக தனியார் தொண்டு நிறுவன தலைவர் சந்தானா சக்கரபோர்த்தி மற்றும் அவரது உதவியாளரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தைகள் காப்பகம் நடத்துவதற்கான உரிமத்தை பாஜக தலைவியான ஜூகி சவுத்ரி பெற்று தந்தது தெரியவந்தது. அந்த காப்பகத்தில் இருந்து 17 குழந்தைகள் விற்கப்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னதாக இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், மருத்துவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் பாஜக மேலவை உறுப்பினர் ரூபா கங்குலி, தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா உள்ளிட்டோருக்கு தொடர் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், சிஐடி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதனிடையே தலைமறைவான மேற்குவங்க மாநில பாஜக பொதுச்செயலாளர் ஜூகி சவுத்ரியை இந்திய - நேபாள எல்லையில் சிஐடி போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.