1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : திங்கள், 1 மே 2017 (16:53 IST)

எம்பிக்கே மயக்க மருந்து கொடுத்து ஆபாச படம் எடுத்த பலே பெண்!

எம்பிக்கே மயக்க மருந்து கொடுத்து ஆபாச படம் எடுத்த பலே பெண்!

குஜராத் வல்சட் மக்களவை தொகுதியின் எம்பியான கே.சி.பட்டேலுக்கு பெண் ஒருவர் மயக்க மருந்து கொடுத்து ஆபாசமாக படம் எடுத்து, பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
குஜராத்தை சேர்ந்த பாஜக எம்பியான கே.சி.பட்டேல் டெல்லி போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பெண் ஒருவர் என்னிடம் உதவி கேட்டு வந்தார். பின்னர் காசியாபாத்தில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு என்னை அழைத்து சென்றார் அந்த பெண்.
 
அதன் பின்னர் அந்த பெண் எனக்கு குடிக்க குளிர்பானம் ஒன்றை கொடுத்தார். அதை குடித்ததும் நான் மயங்கிவிட்டேன். நான் மயக்கம் தெளிந்து எழுந்து பார்க்கும் போது இடையில் என்ன நடந்தது என்பதே எனக்கு தெரியாது. ஆனால் அதன் பின்னர் அந்த பெண் என்னை வைத்து ஆபாச போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்துள்ளார்.
 
அதனை வைத்து தற்போது மிரட்டுகிறார். விடியோக்களை வெளியிடாமல் இருக்க 5 கோடி ரூபாய் கேட்கிறார் அவர். இல்லையென்றால் போலீசில் பொய் புகார் அளிப்பேன் எனவும் கூறுகிறார் என கே.சி.பட்டேல் எம்பி கூறியுள்ளார்.
 
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர். ஆனால் அதே நேரம் உதவி கேட்டு வந்த பெண்ணின் வீட்டிற்கு யாருக்கும் தெரியப்படுத்தாமல் எம்பி நேரடியாக ஏன் செல்ல வேண்டும் என்ற சந்தேகமும் வருகிறது.