1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 18 மார்ச் 2017 (10:51 IST)

ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஹோட்டலில் அடைப்பு - சசிகலா பாணியில் பாஜக!

மணிப்பூரில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் பாஜக தங்களது ஆதரவு எம்எல்ஏக்களை கவுகாத்திக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஒரு விடுதியில் தங்க வைத்துள்ளது.


 

நடந்து முடிந்த மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி இப்போது 28 இடங்களையும், பாஜக 21 இடங்களையும் பிடித்துள்ளது. ஆட்சி அமைப்பதற்கு 31 உறுப்பினர்கள் ஆதரவு தேவை.

இதனால், வரும் 22ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில், பாஜக தங்களது ஆதரவு எம்எல்ஏக்களை கவுகாத்திக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஒரு விடுதியில் தங்க வைத்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு, அதிமுக எம்.எல்.ஏக்கள், கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூரில் உள்ள ‘கோல்டன் பே ஹவுஸ்’ எனும் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.