1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 19 டிசம்பர் 2018 (13:28 IST)

15 லட்சம் வரும், ஆனா லேட்டாகும்: பாஜக அமைச்சர் சர்ச்சைப் பேச்சு; கழுவிஊற்றும் எதிர்கட்சிகள்

கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலிலின் போது, இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்டு மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் எனக் கூறியிருந்தார்.
தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடி பிரதமரானார். ஆனால், அவர் கூறியபடி கருப்புப் பணத்தை மீட்கவும் இல்லை. மக்கள் கணக்கில் இதுவரை பணம் செலுத்தவும் இல்லை.
 
இந்த விவகாரம் குறித்து சமூக வலைத்தளங்கள் மட்டுமில்லாமல், பல தேசிய அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பொய்யான வாக்குறுதிகள் அளித்தோம் என கூறியது கடும் சர்ச்சையைக் கிளப்பியது.
 


















இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தேர்தல் பரப்புரையின் போது  அளித்த வாக்குறுதிகளின் படி மக்களுக்கு 15 லட்சம் ரூபாய் வழங்க தயாராக இருக்கிறோம். அதற்கு கால தாமதமாகும். ரிசர்வ் வங்கியிடம் இதற்காக பேசி இருக்கிறோம். அவர்கள் பணம் கொடுக்க மறுக்கிறார்கள். ஆகவே மக்களின் வங்கி கணக்கிற்கு பணம் ஒரேயடியாக வராது. கொஞ்சம் கொஞ்சமாக வரும். சில தொழில்நுட்ப காரணங்களால் இது தடைபட்டு போகிறது என கூறினார்.
 
இவரது கருத்து கடும் சர்ச்சையைக் கிளப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒரு அமைச்சருக்கு எப்படி பேச வேண்டும் என தெரியாதா என கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.