மாயாவதியை விபச்சாரியோடு ஒப்பிட்ட பாஜக தலைவர்
மாயாவதியை விபச்சாரியோடு ஒப்பிட்ட பாஜக தலைவர்
மயாவதியை விபச்சாரியோடு ஒப்பிட்டு விமர்சித்த பாஜக துணை தலைவருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தின் பாஜக துணை தலைவர் தயாசங்கர் சிங், முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மயாவதியை விபச்சாரியோடு ஒப்பிட்டு பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தயாசங்கர், ”விபச்சாரிகள் கூட கஸ்டமர்கள் பணம் கொடுத்தால் அவர்களை திருப்திபடுத்துவார்கள். ஆனால், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய தலைவரான மாயாவதியோ, ஒருவர் 1 கோடி ரூபாய் கொடுத்தால் அவருக்கு போட்டியிட சீட் தருவதாக கூறுவார், இன்னொருவர் 2 கோடி ரூபாய் கொடுத்தால் அவருக்கு சீட் கொடுத்துவிடுவார்.” என்றார்.