வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 2 நவம்பர் 2015 (18:03 IST)

விலையை குறைப்பதாக கூறிய மோடியில் ஆட்சியில் பருப்பு விலை 70 ல் இருந்து 200 ஆகிவிட்டது: ராகுல் காந்தி

விலையை குறைப்பதாக கூறிய நரேந்திர மோடியின் ஆட்சியில் பருப்பு விலை ரூ.70 ல் இருந்து ரூ.200 ஆகிவிட்டது என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.


 

 
பீகார் மாநிலத்தில் ஐந்தாம்கட்ட சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள ஆர்னியா மாவட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம் செய்தார்.
 
அப்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என மோடி வாக்குறுதி அளித்தார். உங்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? என அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.
 
கருப்புப்பணத்தை வெளிநாடுகளில் இருந்து மீட்டு கொண்டுவந்து, ஒவ்வொரு இந்தியரின் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வங்கியில் செலுத்தப்படும் என்ற வாக்குறுதியை பிரதமர் காப்பாற்றவில்லை.
 
ஓராண்டு காலமாக நாட்டை ஆண்டுவரும் மோடி, விலைவாசியை குறைப்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக, முன்னர் 70 ரூபாயாக இருந்த துவரம் பருப்பின் விலை இப்போது 200 ரூபாயாக ஆகிவிட்டது.
 
"ரொட்டியும், பருப்பும் சாப்பிடுங்கள், ராஜாவின் புகழைப் பாடுங்கள் என்று மக்கள் முன்னர் பாடி வந்தனர். ஆனால், இப்போது அவர்களை எல்லாம், ரொட்டியும், பருப்பும் சாப்பிடாமல், ராஜாவின் புகழைப் பாடுங்கள் என்று பாடும் நிலைக்கு மக்களை அவர் தள்ளிவிட்டார்.
 
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஐந்தாண்டுகால ஆட்சிக்கு மக்கள் விடையளித்து, காங்கிரஸ் ஆட்சியை தேர்ந்தெடுக்கும் நிலையை அவர் உருவாக்கி விட்டார் என்று ராகுல் காந்தி கூறினார்.