வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 9 நவம்பர் 2015 (05:46 IST)

பீகார் சட்டமன்றத் தேர்தல்: நிதிஷ் குமார் -லாலு கூட்டணி 178 இடங்களில் அபார வெற்றி

பீகார் சட்டமன்றத் தேர்தலில்  நிதிஷ் குமார் - லாலு பிரசாத் யாதவ் கூட்டணி 178 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது.
 

 
பீகார் சட்ட மன்றத் தேர்தலுக்கு ஐந்து கட்டங்களாக வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
 
இதில், நிதிஷ் குமார் - லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 178 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
 
இந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வெற்றிகள் இதோ:-
 
ராஷ்டீரிய ஜனதா தளம் - 80
ஐக்கிய ஜனதா தளம் - 71
காங்கிரஸ் - 27
பாஜக - 53
ராஷ்டீரிய லோக் சமதா கட்சி - 2
கம்யூனிஸ்ட் (மா.லெ) விடுதலைக் கட்சி - 3
லோக் ஜனதா சக்தி கட்சி - 2
இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா - 1
சுயேட்சை வேட்பாளர்கள் - 4.
 
இந்த நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில், செய்தியாளர்களை சந்தித்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத், பீகார் முதலமைச்சராக நிதீஷ்குமார் தொடர்ந்து செயல்படுவார் என்று அறிவித்தார்.