செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 14 மே 2021 (12:31 IST)

கோவாக்சின் பார்முலாவை பகிர தயார் - பாரத் பயோடெக்

கோவாக்சின் தயாரிப்பு முறையைப் பிற நிறுவனங்களுக்கு வழங்க பாரத் பயோடெக் ஒப்புதல் அளித்துள்ளது. 

 
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை உச்சமடைந்துள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை தினசரியில் உலகளவில் முதலிடத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசிகளை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தில் பணிபுரியும் 50 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் தங்கள் பார்முலாவை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தடுப்பூசி தயாரிக்க விரும்பும் நிறுவனங்களுக்கு நாங்கள் ஒரு வெளிப்படையான அழைப்பை  விடுக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.