1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 1 டிசம்பர் 2021 (18:27 IST)

வங்கி விபரங்களை திருடும் செயலிகள்: 3 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக தகவல்!

வங்கி விவரங்களைத் திருடும் செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 3 லட்சம் பேர் டவுன்லோட் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தற்போது டிஜிட்டல் உலகில் வங்கிகளில் திருடும் தொழில் நுட்ப திருடர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வங்கி விவரங்களை திருடக்கூடிய செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 3 லட்சம் முறை டவுன்லோட் செய்யப்பட்டு உள்ளதாக ஆய்வு ஒன்றில் தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
ஆன்லைன் வங்கி தகவல்களை இந்த செயலியை பயன்படுத்தி திருடுவதும், மக்களின் தொலைபேசி உரையாடல் ஆகியவற்றை பதிவு செய்வதும், மொபைல் போனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வங்கி விவரங்களை திருடி வருகிறார்கள் எனவும் இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்