வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 16 ஜனவரி 2020 (21:42 IST)

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

ஏற்கனவே பொங்கல் விடுமுறை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளதால் வங்கி வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
ஜனவரி 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 1ஆம் தேதி சனிக்கிழமை அதற்கு மறுநாள் ஞாயிறு விடுமுறை என மூன்று நாட்கள் வங்கிப்பணிகள் முடங்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
 
முன்னதாக பொதுத் துறை வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து இந்திய வங்கிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பாராளுமன்றத்தில் இந்த ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை ஜனவரி 31ஆம் தேதியும், பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அதே தேதிகளில் வங்கி ஊழியர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது