திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (10:52 IST)

வசூலான EMI; திருப்பி கொடுப்பதாக அறிவித்த பாங்க் ஆப் பரோடா!

பேங்க் ஆப் பரோடா மார்ச் EMI-ஐ அதன் வாடிக்கையாளர்களுக்கு விரும்பினால் திருப்பித் தர முடிவு செய்துள்ளது.
 
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டடதை அடுத்து ரிசர்வ் வங்கி மூன்று மாதங்களுக்கு எந்தவிதமான மாதத்தவணைகளும் கட்டத் தேவையில்லை என அறிவித்தார்.  
 
இந்நிலையில், வீட்டுக் கடன் மற்றும் கார் கடனை பெற்ற பாங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்கள் வங்கி வழங்கிய இந்த EMI ரிட்டர்ன் சலுகையைப் பெறலாம் என அறிவித்துள்ளது. 
 
2020 மார்ச் முதல் 2020 மே வரை மூன்று மாதங்களுக்கு EMI தடைக்கான ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியான பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. 
 
மேலும், ரிசர்வ் வங்கியின் சலுகை மாத இறுதியில் வந்ததால் மார்ச் மாதத்திற்கான சில EMI ஏற்கனவே கழிக்கப்பட்டது. எனவே, பேங்க் ஆப் பரோடா மார்ச் EMI-ஐ அதன் வாடிக்கையாளர்களுக்கு விரும்பினால் திருப்பித் தர முடிவு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.