1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sasikala
Last Updated : வியாழன், 17 நவம்பர் 2016 (11:57 IST)

வங்கியில் நாளை முதல் ரூ.2000 மட்டுமே மாற்ற முடியும் - புதிய அறிவிப்பு!

ரூபாய் 500 ரூ.1000 நோட்டு செல்லாது என அறிவித்த தடை தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகந்த தாஸ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.


 
 
வங்கி கவுண்டரில் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றுவதற்கான வரம்பு முதலில் ரூ. 4000 -மாக இருந்தது. தற்போது ரூ.4500லிருந்து ரூ.2000ஆகக் குறைக்கப்படுவதாக பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகந்த தாஸ் அறிவித்துள்ளார். இவை நாளை நவம்பர்18 முதல் அமுலுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
 
அவை பின்வருமாறு:-
 
1. பயிர்கடனுக்காக விவசாயிகள் வங்கிகளில் வாரத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கலாம்.
 
2. பயிர் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையைச் செலுத்த மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது.
 
3. திருமணச் செலவுக்காக ஒரு வங்கிக்கணக்கில் இருந்து 2.5 லட்சம் ரூபாய் பணம் எடுக்கலாம்.
 
4. நாளை (நவம்பர்18) முதல் வங்கி கவுண்டரில் பழைய நோட்டுகள் மாற்றுவதற்கான வரம்பு ரூ.4500லிருந்து ரூ.2000ஆகக் 
 
குறைகிறது.
 
5. பதிவு செய்த வர்த்தகர்கள் ஒரு வாரத்திற்கு 50,000 ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.
 
6. மத்திய அரசு ஊழியர்கள் தங்களது நவம்பர் மாத சம்பளத்தில் இருந்து ரூ.10,000 வரை எடுத்துக்கொள்ளலாம். இது 'சி' கிரேடு ஊழியர்களுக்கு மட்டும் பொருந்தும்.
 
7. நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களை புதிய ரூபாய் நோட்டுக்களுக்கு ஏற்றவாறு மறுவடிவமைப்பு செய்ய ஏற்பாடுகள் முடிக்கிவிடப்பட்டிருக்கிறது. விரைவில் இந்த பணி முடிக்கப்படும்.
 
இந்த சந்திப்பு விவசாயிகள் மற்றும் திருமணம் நடத்துபவர்களுக்கு நேரிடும் இன்னல்களைக் தவிப்பதற்கான அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், நாட்டில் தொடரும் சில்லறை பிரச்னையை சரிசெய்வதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என் தெரிகிறது.