1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 12 மார்ச் 2023 (13:50 IST)

75 நிமிடங்களில் பெஙக்ளூர் டு மைசூர்: விரைவுச்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!

பெங்களூர் மைசூர் விரைவு சாலையை சற்றுமுன் பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில் பெங்களூர் மைசூர் இடையேயிலான 118 கிலோ மீட்டர் தூரத்தை இனி 75 நிமிடங்களில் சென்றடையலாம் என்று கூறப்படுகிறது. 
 
கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் இருந்து 145 கிலோ மீட்டர் உள்ள மைசூருக்கு சாலை மார்க்கமாக சென்றால் 3 மணி நேரமாகும். வார இறுதி நாட்களில் டிராபிக் அதிகமாக இருந்தால் 4 மணி நேரம் கூட ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பெங்களூர் மைசூர் இடையிலான பயண நேரத்தை குறைக்க  ரூ.4840 கோடியில் பத்துவழி நெடுஞ்சாலை அமைக்க கடந்த 2018 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இந்த பணி தற்போது முடிவடைந்துள்ள நிலையில் இன்று பிரதமர் மோடி இந்த சாலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
 
இந்த பாதையின் வழியே பெங்களூர் மைசூர் இடையிலான தூரம் 118 கிலோமீட்டர் ஆக குறைக்கப்பட்டுள்ளது என்பதும் 75 நிமிடத்தில் அதாவது ஒன்றேகால் மணி நேரத்தில் பெங்களூரில் இருந்து மைசூருக்கு சென்று விடலாம் என்று குறிப்பிடத்தக்கது. இந்த நெடுஞ்சாலையில் 11 மேம்பாலங்கள் 64 சுரங்க பாதைகள் மற்றும் 5 புறவழிச் சாலைகள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva