1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 19 ஜூன் 2023 (17:17 IST)

’பாகுபலி’ சமோசாவை சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு.. இதுவரை யாராலும் சாப்பிட முடியவில்லை..!

பாகுபலி சமோசாவை சாப்பிட்டால் ரூபாய் 71 ஆயிரம் பரிசு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை யாராலும் அந்த சமோசாவை சாப்பிட முடியவில்லை என தகவல் வெளியாகி உள்ளன. 
 
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விளம்பரத்திற்காக 12 கிலோ எடையுள்ள பாகுபலி சமோசா காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த சமோசாவை 30 நிமிடத்தில் சாப்பிடுபவருக்கு ரூ.71 ஆயிரம் பரிசு தொகை கொடுக்கப்படும் என அந்த உணவகம் அறிவித்துள்ளது. இதுவரை யாரும் இந்த போட்டியில் வெல்லவில்லை என்றும் ஒரே ஒருவர் மட்டும் 25 நிமிடத்தில் ஒன்பது கிலோ வரை சாப்பிட்டுவிட்டு அதன் மேல் அதற்கு மேல் முடியாது என போட்டியில் இருந்து விலகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் விளம்பரத்திற்காகவும் இந்த உத்தியை அந்த உணவக உரிமையாளர் கையாண்டு உள்ள நிலையில் இந்த சமோசாவை சாப்பிட பலரும் முன் வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை யாரும் வெல்லாத நிலையில் இனிமேல் யாராவது வெல்வார்களா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva