திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2017 (12:33 IST)

பற்களை பிடிங்கி நோயாளியை கொன்ற பல் மருத்துவர்

கர்நாடகா மாநிலம் பகல்கோட்டை பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவரின் பற்கள் தவறான முறையில் பிடிங்கப்பட்டதால் அவர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
கர்நாடகா மாநிலம் பகல்கோட் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் எனபவர் பல் வலி காரணமாக பல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த மருத்துவர் வீரேஷ் மகலத் என்பவர் அப்துல் காதரின் மூன்று பற்கலை பிடிங்கியுள்ளார்.
 
இதில் அப்துல் காதருக்கு கடும் ரத்தம் கசிவு ஏற்பட்டு அவர் மயக்கமடைந்தார். இதனால் அவரை கெ.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக அப்துல் காதர் சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
 
அந்த புகாரில், சிகிச்சை அளித்த மருத்துவரின் கவனக் குறைவால்தான் அப்துல் காதர் மரணமடைந்துள்ளார். கெ.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் கோமா நிலையில் இருந்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த குற்றச்சாட்டுகளை மருத்துவர் வீரேஷ் மகலத் முற்றிலுமாக மறுத்துள்ளார்.