திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வியாழன், 17 அக்டோபர் 2019 (20:26 IST)

குளியல் அறையில் பிறந்த குழந்தை : சடலத்தை புத்தகப் பையில் வைத்திருந்த மாணவி .. அதிர்ந்த போலீஸ்

கேரள மாநிலத்தில் கல்லூரி ஒன்றில் படித்து வந்த மாணவி, கர்ப்பாமனதை அடுத்து ஒருகுழந்தை பெற்றுள்ளார். அந்தக் குழந்தை இறந்ததை அடுத்து அதை தன் புத்தகைப்பையில் வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி வாத்திக்குடி என்ற பகுதியில் வசித்துவரும் மாணவி (20)ஒருவர், ஒரு இளைஞனை காதலித்துள்ளார். அந்த இளைஞருடன் நெருக்கமாக பழகவே மாணவி கர்ப்பமானதாகத் தெரிகிறது.அதை வீட்டில் யாருக்கும் தெரியாமல் மறைந்துக்கொண்டுள்ளார்.
 
ஒருநாள், வீட்டில் இருந்தபோது  மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆறே மாதத்தில் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் என்ன செய்வதென தெரியாமல் பிளாஸ்டிக் பையில் குழந்தையின் சடலத்தை மறைத்துவைத்து, தனது புத்தகப்பையில் வைத்து சுற்றித் திரிந்துள்ளார். தனது உறவினர் ஒருவருக்கு உதவும்படி வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதைப் பார்த்து அலறிய அவர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
 
போலீஸார் மாணவியை விசாரித்தபோது, உண்மையைக் கூறிவிட்டார்.அவரை கர்ப்பமாக்கி காதலரை பற்றி விசாரிக்கையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணமாகி தற்கொலை செய்துகொண்டதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.  தற்போது மாணவியிடம்போலீஸார் தீவிரமாக விசாரித்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.