1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (14:10 IST)

பறவை காய்ச்சல் எதிரொலி: 6 ஆயிரம் கோழிகளை அழிக்க கேரள அரசு முடிவு

Bird Flu
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதை அடுத்து கோழிகள் உள்பட 6 ஆயிரம் பறவைகள் அழிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
கேரள மாநிலம் கோட்டயம் என்ற பகுதியில் பறவை காய்ச்சல் பரவி வருவதை அடுத்து 6 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டதாகவும் பறவைகள் மூலம் மனிதருக்கு தொற்றக் கூடிய இந்த நோயை தடுப்பதற்காக கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
வாத்துக்கள் மற்றும் கோழிகள் ஆகியவை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் அழிக்கப்பட்டதாகவும் கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
அதுமட்டுமின்றி பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், கேரளாவில் இருந்து உறைந்த கோழிகளை  லட்சத்தீவுக்கு கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva