செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2019 (09:07 IST)

வாகன விற்பனை 23 % சரிவு – உற்பத்தியும் சரிவு !

நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலைக் காரணமாக வாகன உற்பத்தி 23 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. பண்டிகை காலத்திலும் இது தொடர்ந்து வருகிறது. இந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாத அரையாண்டில் விற்பனையில் 23 சதவீதமும் உற்பத்தியில் 27 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வணிக வாகன உற்பத்தி 5,59,514 இருந்த நிலையில், இப்போது அது 4,09,153 ஆக குறைந்துள்ளது. அதேப்பொல உள்நாட்டு விற்பனையும்  4,87,319  ல் இருந்து 3,75,480 ஆக குறைந்துள்ளது. அதேபோல ஏற்றுமதியும் 41.58 சதவிகிதம் குறைந்துள்ளது.