1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (16:10 IST)

அசாமில் பயங்கரவாதிகள் தாக்குதல்: துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி

அசாம் மாநிலம் கோக்ரஜஹார் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.


 

 
அசாம் மாநிலம் கோக்ரஜஹார் மாவட்டத்தில் மக்கள் கூட்டம் அதிக உள்ள சந்தை பகுதியில் பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
 
உடனே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர்களும் தாக்குதலில் ஈடுப்பட்டனர். பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை கடுமையாக நடைப்பெற்றது. அதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
தாக்குதலில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.