செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (08:54 IST)

அசாமில் அரிய வகை தேயிலை ஏலம்! – கிலோ ரூ.1 லட்சத்திற்கு விற்பனை!

அசாம் மாநிலத்தில் மிகவும் அரிதான தேயிலை வகை ஒன்று கிலோ ரூ.1 லட்சம் என்ற அளவில் ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் தேயிலை தோட்டங்களுக்கு பிரசித்தியானது. ஆண்டுதோறும் பல வகை தேயிலைகள் இங்கு பயிர் செய்யப்படுகின்றன. தரத்திற்கேற்ப அவை பல வகைகளில் பல விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் அசாமில் சமீபத்தில் தேயிலை பயிர்கள் மீதான ஏலம் நடந்துள்ளது. இந்த ஏலத்திற்கு அசாமில் விளையும் அரிய வகை தேயிலையான மனோகரி கோல்டு என்ற வகையில் ஏலம் வந்துள்ளது. பலரும் அதை ஏலத்தில் வாங்க போட்டியிட்ட நிலையில் இறுதியாக ஒரு கிலோ ரூ.1 லட்சம் என்ற அளவில் இந்த தேயிலை விற்பனையாகியுள்ளது.