1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 28 மே 2021 (12:38 IST)

ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்… டெல்லி மாநில அரசு அறிவிப்பு!

டெல்லி மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக இறந்தவர்களின் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணமாக 50000 ரூபாய் வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்திருந்தது. இப்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக இறந்தவர்களுக்கு 5 லட்ச ரூபாய் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழு, நோயாளிகள் மரணம் மற்றும் மரணத்திற்கான காரணங்கள் குறித்து ஆய்வு நடத்திய பின்னர் இது வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.