வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 20 ஏப்ரல் 2023 (17:41 IST)

ஜம்மு- காஷ்மீரில் ராணுவ வாகனத்தில் தீ விபத்து....4 பேர் பலி?

jammu Kashmir
ஜம்மு காஷ்மீரில் ராணுவம் வாகனம் தீப்பிடித்து விபத்திற்குள்ளானது. இதில், 4  ராணுவ வீரர்கள்  உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகிறது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் இன்று சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தில் திடீரென்று தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது.

இதில், பயணம் செய்த 4 ராணுவ வீரர்க்ள் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.  இந்தச சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.