முலாயம் சிங் பிறந்தநாள் விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரி


லெனின் அகத்தியநாடன்| Last Modified சனி, 21 நவம்பர் 2015 (15:50 IST)
உத்திரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவின் பிறந்தநாள் விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது.
 
 
உத்திரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவின் 76வது பிறந்த நாள் விழா இன்று (சனிக்கிழமை) அம்மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது.
 
முலாயம் சிங்கின் பிறந்தநாளையொட்டி முலாயம் சிங் யாதவின் சொந்த ஊரான சைஃபாய் கிராமத்தில் இரண்டு நாள் கலாச்சார திருவிழாவாக கொண்டாடப்பட உள்ளது.
 
இதன் தொடக்க விழாவில், வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது இசைக் குழுவுனருடன் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார்.
 
மேலும் இந்த விழாவில், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், முன்னாள் பிரதமர் தேவகௌடா, உத்திரப் பிரதேச மாநில ஆளுநர் ராம் நாயக் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
 
இது தவிர, பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் அவருடைய மனைவி ஜெயா பச்சன், அனில் அம்பானி, ஆதி கோத்ரேஜ் மற்றும் உத்திரப்பிரதேச மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்கின்றனர்.
 
ஆனால், அதே சமயம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும்போது, முதலமைச்சரின் குடும்பத்தினருககு ஆடம்பரமான இந்த பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தேவைதானா? என்று சர்ச்சையும் எழுந்தது.


இதில் மேலும் படிக்கவும் :