ஏப்ரல் மாத ஜிஎஸ்டி ரூ.2 லட்சம் கோடி.! வரலாறு காணாத வசூல்..!!
ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத சாதனை அளவாக ரூ.2.10 லட்சம் கோடி சரக்கு, சேவை வரி வசூலாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “இதுவரை இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.2 லட்சம் கோடியாக வசூல் ஆகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.43,846 கோடியும், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி ரூ.53,538 கோடியும், மத்திய-மாநில ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.99,623 கோடியும், செஸ் வரி ரூ.13,260 கோடியும் வசூல் ஆகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு வர்த்தகம் அதிகரித்ததால் ஜிஎஸ்டி வசூல் வரலாறு காணாத வகையில் அதிகமாக இருப்பதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.