ஆப்பிள் மூலம் ரயில் வேகம் அதிகரிப்பு; மத்திய அமைச்சர் தகவல்
ஆப்பிள் நிறுவனத்தின் உதவியோடு ரயில்களை மணிக்கும் 600 கி.மீ வேகத்தில் இயக்குவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைப்பெற்ற தொழில் வர்த்தக சபை கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பாபு கூறியதாவது:-
நாடு முழுவதும் ரயில் சேவையின் வேகத்தை அதிகரித்து பயணிகளின் நேரத்தை குறைக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக ரூ.18,000 கோடி மதிப்பிலான திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆப்பிள் நிறுவனத்திடம் அரசு சார்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
முதலில் குறிப்பிட்ட ரயில்கள் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் இயக்கப்படும். பின் படிப்படியாக ரயில்களின் மணிக்கு 600 கி.மீ வேகத்தில் இயக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வேகத்தை கூட்டும் அதே சமயத்தில் பயணிகளின் பாதுகாப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றார்.