வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 ஜூன் 2021 (07:49 IST)

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பீகாரில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினாரா?

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பீகாரில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினாரா?
நடிகை அனுபமா பரமேஸ்வரன் பீகாரில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியதாக புகைப்படத்துடன் கூடிய ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பிரேமம், கொடி, உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவரது புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் பட்டியல் ஒன்று பீகார் மாநில ஆசிரியர் தகுதித்தேர்வில் வெளியாகி உள்ளது. இது குறித்து பின்னர் விசாரித்தபோது பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் எழுதிய தேர்வில் அனுபமா பரமேஸ்வரன் புகைப்படம் தவறுதலாக இணைக்கப்பட்டு விட்டதாகவும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழ், மலையாள நடிகை ஒருவரின் புகைப்படம் பீகாரில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய மாணவர் ஒருவரின் மதிப்பெண் பட்டியலில் எப்படி வந்தது என்பது பெரும் ஆச்சரியமாக உள்ளது. மதிப்பெண் பட்டியலை கம்ப்யூட்டரில் பதிவு செய்த ஊழியரின் கவனக்குறைவால் தான் இது நடந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது