வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 1 பிப்ரவரி 2016 (05:21 IST)

ஆந்திராவில் பெரும் வன்முறை- ரயிலுக்கு தீ வைப்பு: போலீஸ் குவிப்பு

ஆந்திராவில் பெரும் வன்முறை- ரயிலுக்கு தீ வைப்பு: போலீஸ் குவிப்பு

ஆந்திர மாநிலத்தில், காப்பூ இன மக்கள், தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி நடத்திய போராட்டத்தில் ரயிலுக்கு தீ வைத்தனர்.
 

 
ஆந்திர மாநிலத்தில் காப்பூ இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கடந்த பல வருடமாக அரசுக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
 
இந்த நிலையில், இவர்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி துனி பகுதியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பெரும் வன்முறை வெடித்தது. 
 
இதில், கிழக்கு கோதாவரி மாவட்டம் வழியாக சென்ற ரத்னாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து, காப்பூ இன மக்கள் திடீரென யாரும் எதிர்பாரத வகையில் 2 ரயில் பெட்டிகளுக்கு தீ வைத்தனர். இந்த தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அனைத்தனர்.
 
மேலும், கொல்கத்தா - சென்னை தேசிய நெடுஞ்சாலையையும் போராட்டக்கார்கள் ஸ்தமிக்கவைத்தனர். இதனால், அந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. இதனால், ஆந்திராவில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டப் பகுதிகளில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.