காதலன் மீது ஆசிட் வீசிய காதலி: ஏமாற்றியதால் ஆத்திரம்!

காதலன் மீது ஆசிட் வீசிய காதலி: ஏமாற்றியதால் ஆத்திரம்!


Caston| Last Modified வியாழன், 25 மே 2017 (17:14 IST)
ஆந்திரா மாநிலத்தில் காதலன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த காதலி ஆசிட் வீசி காதலனை கொலை செய்துள்ளார்.

 
 
ஆந்திராவின் குண்டூரை சேர்ந்த 24 வயதான ஷேக் முகமது என்பவரும் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஷேக் முகமது திடீரென இரண்டு நாட்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
 
இதனால் அவரது முன்னாள் காதலி மனமுடைந்து தன்னை ஏமாற்றிய காதலனை பழிவாங்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தனது திருமண ஆல்பம் புகைப்படங்களை கடையில் கொடுத்துவிட்டு வீடு திரும்பிய ஷேக் முகமது மீது சாலை ஓரத்தில் மறைந்திருந்த காதலி ஆசிட்டை வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
 
இதனையடுத்து வலியால் அலறி துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய காதலியை தேடி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :