சாட்டிலைட் மூலம் நீர்நிலைகளை தேடும் ஆந்திரா: டாஸ்மாக் வைக்க இடம் தேடும் தமிழகம்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராக பதவியேற்று மாநிலத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆட்சிக்கு வந்த பதினோரு மாதத்தில் நதிகளை இணைத்து த்ண்ணீர் பிரச்சனையை தீர்த்தார்.
மேலும் 'அமராவதி' என்ற உலகத்தரம் வாய்ந்த புதிய தலைநகரம் ஒன்றையும் ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் சாட்டிலைட் உதவியுடன் ஆந்திராவில் உள்ள நீர்நிலைகளை அறிய ஆந்திர அரசும், விஞ்ஞானிகளும் கூட்டாக முயற்சித்து வருகின்றனர். நீர்நிலைகளை கண்டுபிடித்து புதிய குளங்கள் வெட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு நீதிமன்ற நடவடிக்கைகளால் மூடப்பட்ட 3000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க மிகத்தீவிரமாக புதிய இடங்களை கண்டுபிடித்து வருகிறது. ஆந்திராவும், தமிழகமும் தண்ணீருக்காக நடவடிக்கைகள் எடுத்து வந்தபோதிலும் எந்த தண்ணீரின் நடவடிக்கை சிறந்த நடவடிக்கை என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்