1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 3 ஜூன் 2016 (14:04 IST)

கர்ப்பிணியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து 6 பேர் பலி

கர்ப்பிணியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து 6 பேர் பலி

கர்ப்பிணியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வேன் விபத்தில் சிக்கியதால், அதே இடத்தல் 6 பேர் பரிதாபமாக துடிதுடித்து பலியானார்கள்.
 

 
பீகார் மாநிலம், புரினியா மாவட்டத்தில் உள்ள பாகல்பூரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் பிரசவ வேதனையால் துடித்தார். இதனால்,  அப் பெண்மணியை உடனே ஆம்புலன்ஸ் மூலம் போர்ப்ஸ்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
அப்போது, அந்த ஆம்புலன்ஸ் மேவாலால் அருகே சென்றபோது எதிரே வந்த ஒரு லாரி ஆம்புலன்ஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில், ஆம்புலன்ஸில் இருந்த கர்ப்பிணிப் பெண் மற்றும் அவருக்கு துணையாக சென்ற 5 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உடல் நசுங்கி, பரிதாபமாக பலியானார்கள்.