புதன், 11 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 3 அக்டோபர் 2024 (07:45 IST)

சமந்தா விவாகரத்துக்கு நான் காரணமா? அமைச்சர் சுரேகாவுக்கு எச்சரிக்கை விடுத்த கே.டி.ஆர்

சமந்தா விவாகரத்துக்கு நான் காரணமா? அமைச்சர் சுரேகாவுக்கு எச்சரிக்கை விடுத்த கே.டி.ஆர்சமந்தா மற்றும் நாகசைதன்யா விவாகரத்துக்கு நான் காரணம் என்று கூறிய அமைச்சர் சுரேகா மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராமராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார், இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சமந்தா மற்றும் நாகசைதன்யா விவாகரத்துக்கு கே.டி. ராமராவ் தான் காரணம் என்று தெலுங்கானா அமைச்சர் சுரேகா பேசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு சமந்தா மற்றும் நாகசைதன்யா தங்களது சமூக வலைதளங்களில் விளக்கம் அளித்துள்ளனர். "எங்கள் விவாகரத்துக்கு எங்களுடைய தனிப்பட்ட முடிவு தான் காரணம்" என்று கூறியிருந்தனர்.மேலும், நாகார்ஜுனாவும் இந்த விவகாரத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
 
இந்த நிலையில், "அரசியல் எதிரிகளை விமர்சிக்க பிரபலங்களின் பெயர்களை பயன்படுத்துவதா? சமந்தா, நாகசைதன்யா விவாகரத்துக்கு நான் காரணமா?" என்று கே.டி. ராமராவ் கேள்வி எழுப்பியுள்ளார். 24 மணி நேரத்தில் அமைச்சர் சுரேகா மன்னிப்பு கேட்க வேண்டும்; அவ்வாறு செய்யாவிட்டால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவதூறு கருத்தை திரும்பப் பெறுமாறு முன்னாள் அமைச்சர் கே.டி. ராமராவ் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Siva